Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனையா? இதோ இந்த ஒரு பேக் போதும் இனி ஆயுசுக்கும் கவலையில்லை

#image_title

இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனையா? இதோ இந்த ஒரு பேக் போதும் இனி ஆயுசுக்கும் கவலையில்லை

இன்றைய தினங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை நரை முடி அதாவது வெள்ளை முடி.

ஆரம்ப கலாத்தில் இந்த வெள்ளை முடி பிரச்சனை வயதானவர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் அதிக மக்களுக்கு இந்த நரைமுடி பிரச்சனை மட்டும் தான் அதிக அளவில் இருக்கிறது.

இப்படி இருக்கும் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு மக்கள் பலரும் பலவிதமான ஹேர் டைகளை பயன்படுத்துவீர்கள். ஆனால் அது பயன் தந்துருக்காது. அதனால் தலையில் இருக்கும் நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டுமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நரை முடியை முழுவதுமாக நிரந்தரமாக கருப்பாக மாற்ற முதலில் ஒரு ஹேர் ஸ்பிரேவை தயாரிக்க வேண்டும். இந்த ஸ்ப்ரேவினை பயன்படுத்துவதன் மூலம் நரை முடி மற்றும் செம்பட்டை முடி முழுவதுமாக மறைந்து விடும்.

ஸ்ப்ரே செய்ய தேவையான பொருட்கள்

கிரீன் டீ லீப்(Green Tea Leaf) – 1 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு

கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி

செய்முறை

ஸ்டெப் 1

கிரீன் டீ லீப்(Green Tea Leaf) இலையானது தலையில் இருக்கும் நரை முடிகளை கருப்பா மாற்றுவதற்கு மட்டுமில்லாமல் முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. அதனால் முதலில் அடுப்பை பற்ற வைத்த பிறகு ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி தண்ணீர் சூடு ஆகும் வரை வைக்கவும்.

ஸ்டெப் 2

தண்ணீர் சூடான பிறகு அதனுடன் கிரீன் டீ லீப்மை சேர்த்து 5 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 3

பிறகு 5 நிமிடம் கழித்து அதனுடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து 2 நிமிடம் கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 4

கறிவேப்பிலையில் அதிகளவில் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலையில் உள்ள இந்த சத்துகள் அனைத்தும் முடியின் வேர் வரை சென்று முடியை நன்கு கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.

இதனால் ஒரு கைப்படி கறிவேப்பிலையை எடுத்து அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 5

சிறிது நேரம் கழித்து தண்ணீர் நன்றாக நிறம் மாறிய பிறகு அதனை கீழே இறக்கி வைத்து நன்றாக ஆறிய பின்னர் அந்த தண்ணீரை நன்றாக வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்

ஸ்ப்ரேவை பயன்படுத்தும் முறை

நீங்கள் தலைக்கு குளித்த அடுத்த நாளில் இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்த வேண்டும். தயார் செய்த ஸ்ப்ரேவை தலையில் உள்ள முடியில் நன்றாக படும்படி ஸ்ப்ரே செய்ய வேண்டும்.

இந்த ஸ்ப்ரேவினை தலைக்கு அடித்த பிறகு அப்படியே காயவிட்டு கழுவாமல் அப்படியே விட்டு விடுங்கள். இதன்படி செய்வதால் நரைமுடி கருப்பாக மாறுவது மட்டுமில்லாமல் பொடுகு, பேன் போன்ற தொல்லைகள் இருக்காது.

Exit mobile version