Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது அவராகவே இருக்க முடியாது! நான் அவரிடம் போக வேண்டும் என விமான விபத்தில் உயிரிழந்த தன் கணவனை கண்டு கதறி அழுத கர்ப்பிணி பெண்!

 

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த கணவனைக் கண்ட கர்ப்பினிப்பெண் இது என் கணவர் இல்லை. அவர் ஆக இருக்க முடியாது என கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சில தினங்களுக்கு முன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது. அதில் பயணிகள், விமானி, துணை விமானி என 18 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 120க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துணை விமானி அகிலேஷ் ஷர்மா அவர்களும் உயிரிழந்துள்ளார்.

அவர் இறப்பு குறித்து அவரது மனைவிக்கு தகவல் சொல்லபடாமலேயே இருந்தது. காரணம் என்னவென்றால் அவர் ஒரு நிறைமாத கர்ப்பிணி என்பதால் இந்த சம்பவம் அவருக்கு அதிர்ச்சி தரும் சம்பவமாக இருக்கும் என்பதனால் அதை அவரிடம் மறைத்துள்ளனர்.

ஓரிரு வாரங்களில் குழந்தை பேறு நடைபெறும் என்பதாலும், இந்த அதிர்ச்சி சம்பவம் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும்,அவரது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதாலும் அவரிடத்தில் இதை மறைத்துள்ளனர்.

எப்படியோ கணவர் இறந்த சம்பவம் மெகா அவர்களுக்கு தெரிய வர பித்து பிடித்தவர் போல் ஆகிவிட்டார்.

அகிலேஷ் ஷர்மாவின் உடல் கேரளாவிலிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு கொண்டு சொல்லப்பட்டது.

அப்பொழுது அகிலேஷ் இருந்த சவப்பெட்டியை பார்த்து கதறி அழுதுள்ளார். அவரால் அகிலேஷ் உயிரிழந்ததை நம்ப முடியவில்லை. மேலும் “இது என் கணவர் இல்லை ,இது அவராகவே இருக்க முடியாது,அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார் வருவேன் என்று, அவர் இங்கு தான் இருப்பார் என்னை போக விடுங்கள்’. என்பது போல் மிகவும் கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்து உள்ளார்.

இதைக் கண்ட அங்கு உள்ளோரின் மனதில் கண்ணீர் பொங்க செய்துள்ளது.அவரது உறவினர்கள் எவ்வாறு சமாதானப்படுத்துவது தெரியாமல் தவித்து வந்தனர். மேலும் ஒரு மருத்துவர் குழு அவரது உடலை கவனித்தபடி உள்ளது.

 

Exit mobile version