ஒரே நேரத்தில் 3 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்! தட்டி தூக்கிய காவல்துறை
ராமேஸ்வரத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரே நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தேவாலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவாலய போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் உள்ள புனிதர் அருள் ஆனந்தர் தேவாலயம் இருக்கிறது. இந்த தேவாலயத்துக்கு வழிபாட்டிற்க்காக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். இந்த சர்ச்சில் ஜான் ராபர்ட் என்ற பாதிரியாராக இருந்து வருகிறார்.
இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தோணித்துறை, வலையர்வாடி மற்றும் மரவெட்டிவலசை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பாதிரியாராக உள்ளார்.
இந்த தேவாலயத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் வழிபாட்டிற்காக வந்துள்ளனர். அவர்களிடம் ஜான் ராபர்ட் என்ற இந்த பாதிரியார் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஜான் ராபர்ட்டிடம் குற்றச்சாட்டு குறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர்.
நடத்தப்பட்ட விசாரணையில் தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரியும் ஜான் ராபர்ட் என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் இதுகுறித்து பாதிரியார் மீது மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் போலீசார் பாதிரியாரை கைது செய்து, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஒரே நேரத்தில் 3 குழந்தைகளிடம் பாதிரியார் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.