Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாம்தமிழர் கட்சி தலைமையில் அக்டோபர் 8ல் காவிரி நதிநீர் திறந்துவிடக்கோரி சென்னையில் கண்டன ஆர்பாட்டம்!!

#image_title

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு வினாடிக்கு  3000 கனஅடி நீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணை பிறப்பித்திருந்தது.இதனை மறுத்த கர்நாடகா அரசு மற்றும் அங்குள்ள பல அமைப்புகளும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில்  கர்நாடகத்தில் பல்வேறு  தரபட்ட  அமைப்புகளும்  போராட்டம் நடத்தி வருகின்றன.தமிழகத்திற்கு  ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என அங்குள்ள அமைப்புகள் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர்

கர்நாடகாவில் பெங்களூர்  பந்த்,கர்நாடக மண்டியா பந்த்,கர்நாடகா பந்த் போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்திவருகிறது கர்நாடக அமைப்புகள்.நாளை கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் போராட்டம் வட்டாள் நாகராஜன் தலைமையில் நடத்தவிருப்பதாக  அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரை அவமதித்து போராட்டம்:

தமிழக முதலைமைச்சர் அவர்களின் புகைபடத்தினை வைத்து தர்ப்பணம் செய்து போராட்டம் நடத்திவருகின்றனர்.கர்நாடக அமைப்புகளின் இந்த செயல் கடுமையாக கண்டிக்கதக்கது என நாம்தமிழர் கட்சி தலைமை  சீமான் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.

தமிழகத்தில் விவசாயிகள் தங்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி போராட்டம்:

கர்நாடகத்தின் இந்த இனவெறி செயலை கண்டித்து வரும் அக்டோபர் 8ம் தேதி தொடர்வண்டி மறியல் போராட்டம்  நடத்தவிருப்பதாக   நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.இப் போராட்டம் அக்டோபர் 8ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை  நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதுமுள்ள நாம் தமிழர் கட்சி தம்பி,தங்கைகளை பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Exit mobile version