ஆண்,பெண் அனைவருக்கும் அந்தரங்க பகுதியில் முடி இருப்பது பொதுவான ஒரு விஷயம் தான்.பருவ காலத்தில் பெண்களுக்கு அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் முடி வளரத் தொடங்குகிறது.
அதேபோல் ஆண்களுக்கு தாடி,மீசை,அக்குள் முடி மற்றும் ஆணுறுப்பை சுற்றி முடி வளர்கிறது.தற்பொழுது அந்தரங்க பகுதியில் முடி இருப்பதை பலரும் வெறுக்கின்றனர்.இதனால் ஷேவ்,வாக்ஸ் மற்றும் சிகிச்சை மூலம் முடியை நீக்குகின்றனர்.சிலருக்கு அந்தரங்க முடியை சங்கடத்தை கொடுப்பதால் அதை அடிக்கடி ஷேவ் செய்து நீக்கிவிடுகின்றனர்.அந்தரங்க பகுதியில் உள்ள முடியை அகற்றுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் தான்.
சிலர் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள்.இதனால் அவ்விடத்தில் பாக்டீரியா மற்றும் கிருமி தொற்று அதிகரித்து பாதிப்பை உண்டாக்கிவிடும்.அந்தரங்க பகுதியில் உள்ள முடியை முழுமையாக அகற்றிவிட்டால் பிறப்புறுப்பு பகுதியில் எளிதில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அதேபோல் அதிகளவு அந்தரங்க முடி இருந்தால் அரிப்பு,எரிச்சல் போன்ற பிரச்சனையை சந்திக்க நேரிடும்.சில பெண்களுக்கு அந்தரங்க முடியை நீக்கிய பிறகு உடலுறவு கொள்ள விருப்பம் ஏற்படும்.இது எல்லோருக்கும் பொருந்தாது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
அதேபோல் ஆண்கள் தங்கள் துணையின் அந்தரங்க பகுதியில் முடி இல்லாமல் இருப்பதை தான் விரும்புகின்றனர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறான எண்ணோட்டம்.இது அனைவருக்கும் பொருந்தாது.அந்தரங்க பகுதியில் முடி இருந்தால் பாலியல் தொற்று அதிகரிக்கும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.இருப்பினும் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.
சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் அந்தரங்க பகுதியை ஷேவ் செய்யக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தால் இதுவும் தவறான எண்ணம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் பாதுகாப்பான முறையில் அந்தரங்க முடியை அகற்றலாம்.அதேபோல் அடிக்கடிஅந்தரங்க முடியை அகற்றுவதை தவிர்க்க வேண்டும்.தொடர்ந்து அந்தரங்க முடியை அகற்றினால் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள தோல் தடிப்பு அளவு குறைந்துவிடும்.