தீபாவளிக்கு முன் தமிழக அரசின் தரமான சம்பவம்!! மக்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!

0
150
A quality incident of Tamil Nadu government before Diwali!! Surprise waiting for people!!

Chennai: தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். அந்த வகையில் அரசு, மக்கள் பிரச்சனை இல்லாமல் செல்ல சிறப்பு பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2,31,363 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். இதை தொடர்ந்து மொத்தம் தீபாவளி பண்டிகை காரணமாக 4059 பேருந்துகள் இயங்கியது.  இத்தனை லட்சம் பேர் பயணம் செய்தும் கிளாம்பாக்கதில் எந்த விதமான சிக்கலும் ஏற்படவில்லை.

மக்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மிக சிறந்த பயணத்தை மேற்கொண்டனர். தமிழக அரசு எப்போதும் இல்லாத அளவிற்கு தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும், பிற ஊர்களுக்கு செல்ல 2,910 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இது மட்டும் அல்லாமல் பண்டிகை காலங்களில் மக்களுக்கு எந்த ஒரு சிக்கலும் நேரிட கூடாது என்பதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே இந்த தீபாவளி பண்டிகை நாட்களில் 28.10.2024, 29.10.2024, 30.10.2024 தமிழக அரசு மக்களுக்காக சிறப்பு பேருந்துகளில் செல்ல இந்த திட்டம் உருவாக்கப்பட்டது ஆகும். எனவே தனது ஊர்களுக்கு செல்ல இந்த திட்டத்தை பயன்படுத்தி முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயன்பெறுங்கள்.