இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர்களிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!!

0
80
#image_title

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர்களிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!!

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த மாநாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு முன் பணமாக ரூ.29.50 கொடுத்ததாக கூறுகின்றனர்.

மாநாடு இரத்தாதனைத் தொடர்ந்து இந்திய அறுவை சுகிச்சை சங்கத்தினர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுத்த முன் பணத்தினை திரும்ப கேட்டுள்ளனர்.ஏ.ஆர்.ரஹ்மான் காசோலை ஒன்றினை சங்கத்தினரிடம் அளித்திருக்கிறார்.ஆனால் வங்கியில் பணமில்லாததால் காசோலை திரும்பி வந்து விட்டதாகவும் இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக முன் பணத்தை திருப்பித் தரக்கேட்டு வருகிறோம்.

ஆனால் இதுவரை பணத்தை திருப்ப தரவில்லையெனவும் கூறிவருகின்றனர்.இந்த செயலை கண்டித்து இந்திய அறுவை சிகிச்சை சங்கத்தினர் சார்பாக இழப்பீடு தொகை கேட்டு புகார் அளித்துள்ளனர்.இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வாதமானது:
இதனைத் மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்களின் இந்த அவதூறு முறைகேடானது.முன்பணத்தொகையை தான் நேரடியாக பெறவில்லை என்றும் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்ட தொகைக்கு நான் பொறுப்பேற்க முடியாதென்றும் கூறியுள்ளார்.

இந்த புகார் என் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார்.
இதனால் இந்திய அறுவை சிகிச்சை சங்கத்தினர் மீது மறுபுகார் கொடுத்து அவர்களிடமிருந்து ரூபாய் 10 கோடி இழப்பீடாக கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.