கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் வீட்டில் அதிரடி சோதனை
சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ அமைப்பு சேர்ந்தவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு நடைபெற்றது
கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் இல்லத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், கேரளா என பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பி.எப்.ஜ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதும் மாநகர போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய சி ஆர் பி எப் போலீஸார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர் என்.ஐ.ஏ அதிகாரிகளின் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப் ஐ அமைப்பு சேர்ந்தவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக இஸ்மாயிலை என்.ஐ.ஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதனிடையே கர்நாடகாவில் இருந்து இன்று அதிகாலை ரயில் மூலம் கோவை வந்த இரண்டு பேரை பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அருகில் உள்ள காவலர் அருங்காட்சி மையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.