Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்!

சாட்சிகள் அனைத்தும் இறந்து போனதற்கு பின்பு வெளியே வருவதற்கு பெயர் விடுதலை கிடையாது தப்பிப் பிழைப்பது ஆனாலும் அதிகநாட்கள் தப்பித்துவிட இயலாது என்று ராசாவிற்கு எச்சரிக்கை வைத்திருக்கின்றார் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான விந்தியா.

அதிகநாட்கள் தப்பித்துவிட இயலாது என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருக்கிறார் கட்டுரை ஒன்று நமது அம்மா நாளிதழில் வெளியாகி இருக்கின்றது அதில் சட்டத்திற்கு தேவையானது சாட்சிதான் தர்மம் இல்லை என்ற தைரியத்தில் செய்த ஊழல் தவறு செய்யவில்லை என்றால் ராஜாவும் கனிமொழியும் எதற்காக திகார் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் சாட்சிகள் அனைத்தையும் அழித்து விட்டு வெளியே வந்து விட்டால் அதற்குப் பெயர் விடுதலை கிடையாது தப்பிப்பது என்றுதான் சொல்வார்கள் ஆனாலும் வெகுநாட்கள் தப்பித்து விட இயலாது நாங்கள் மக்களை காப்பதற்காக பப்ஜி செயலியை தடை செய்ய மனு கொடுத்தது போல 2ஜி பற்றி பேசுவதை தடை செய்யுங்கள் என்று மனு கொடுப்பார்கள் போல இருக்கின்றது ராஜா சாதிக் பாட்ஷாவை கொலை செய்யாமல் அந்த வழக்கை நடத்தி அவர் ஜெயித்து இருந்தால் பாராட்டலாம்.

ஆனால் சாதிக் பாட்சா இறப்பிற்கு அடித்த கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியிலேயே கூடா நட்பு கேடாய் முடியும் என்ற வாசகம் எழுதுகின்ற அளவிற்கு கேவலமாக நடந்து கொண்டுவிட்டு அந்த வழக்கில் இருந்து வெளியே வந்தீர்கள் இதற்குப் பெயர் விடுதலையா என்றெல்லாம் வெளுத்து வாங்கி இருக்கும் விந்தியா சூடு சொரணை இருப்பவர்கள் பொய் வழக்கு போட்ட காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து இருக்க வேண்டும் என்று சாடி இருக்கின்றார் ஏன் அப்படி செய்யவில்லை ஏனென்றால் அந்த வழக்கு உண்மையானது செய்த ஊழலும் உண்மையானது.

2ஜி வழக்கு இன்னும் முடியவில்லை காத்துக்கொண்டிருக்கிறது பூதம் போல ராஜாவிற்கும் கனிமொழிக்கும் பரவாயில்லை பீகார் சிறையில் கெஸ்ட் ஹவுஸ் போல பழகிவிடும் ஸ்டாலினை நினைத்தால் தான் கவலையாக இருக்கின்றது ஆங்கிலம் இந்தி தெரியவில்லை என்றால் கூட சமாளித்துவிடலாம் ஆனால் அவருக்கு தமிழ் தெரியாது கடைசியாக ஒன்று சொல்கின்றேன் சாட்சி எல்லாம் இறந்து போன பின்பு வெளியே வருவதற்கு பெயர் விடுதலை இல்லை தப்பிப் பிழைப்பது ஆனாலும் வெகு நாட்கள் தப்பித்து விட இயலாது என்று தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version