Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: நாளை நடக்கவிருக்கிறது வேலைவாய்ப்பு முகாம்!!

வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: நாளை நடக்கவிருக்கிறது வேலைவாய்ப்பு முகாம்!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலை இல்லா இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்று தரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (அக்டோபர் 28) நடக்க உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமானது சென்னை 32 ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது இந்த முகாமில் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆனவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

மேலும் இந்த முகாமில் 20 -ற்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பினை தருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களின் பணி எந்த விதத்திலும் ரத்து செய்யப்படாது.

மேலும் இந்த முகாமில் வேலை வாய்ப்பினை தருவதற்காக கலந்து கொள்ளும் நிறுவனமோ அல்லது வேலை தேடும் இளைஞர்களோ எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இந்த வாய்ப்பினை வேலையற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை இயக்குனர் வீரராகவராவ் கூறியுள்ளார்.

Exit mobile version