தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த இருந்து பல வினோத சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.அந்த விதத்தில் தமிழகத்திலேயே பல அரசியல் கட்சித் தலைவர்கள் பல அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார்கள். என்னதான் எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்தாலும் அதிலும் ஒரு வரையறை இருக்க வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.அந்த மரபை மீறி விமர்சனம் செய்யும் யாராக இருந்தாலும் தமிழக மக்களால் வெறுத்து ஒதுக்க படுவார்கள் என்பதே வரலாறு ஆனால் இந்த வரம்பு மீறிய விமர்சனம் செய்வதில் தமிழகத்தில் திமுக மிக வல்லமை பெற்ற ஒரு கட்சியாக விளங்கி வருகிறது.
தேர்தல் சமயம் என்று வந்துவிட்டால் இந்துக்களை பற்றி தவறாக பேசுவது இந்து பெண்களை தவறாக பேசுவது இந்து கடவுள்களை கொச்சைப்படுத்துவது போன்ற பல அருவருக்கத் தக்க செயல்களை செய்வதில் அந்த கட்சி தான் முதல் இடம் பிடித்து இருக்கிறது. அதில் தமிழக மக்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை.என்னதான் சாதி மதங்களை பற்றி தவறாக பேசினாலும் ஒரு அரசியல் கட்சி தலைவரை விமர்சனம் செய்யும்போது எல்லோருக்குமே நாவடக்கம் தேவை என்பது உன்னை ஆனால் அதனை மீறி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ராசா முதல்வர் தொடர்பாகவும், அவருடைய தாய் தொடர்பாகவும் ஒரு மிக அருவருக்கத்தக்க தவறான ஒரு விமர்சனத்தை முன்வைத்தது தமிழக மக்களிடையே பரபரப்பையும் மிகப்பெரிய கோபத்தையும் உண்டாக்கியது.
இதனால் அதிமுகவினர் மட்டுமல்லாது தமிழகத்தில் இருக்கக்கூடிய பல அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், அரசியல் நோக்கர்கள் என்று அனைத்து தரப்பிலிருந்தும் ராசா மீது கடுமையாக குற்றம் சுமத்தி விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள்.ஆனால் இதையெல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருந்த ராசா நான் இதையெல்லாம் பேசவில்லை என்னுடைய பேச்சு எடிட்டிங் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார். ஆனாலும் தமிழக மக்களிடையே இந்த விமர்சனத்திற்கான கொந்தளிப்பு சிறிதும் அடங்கவில்லை.அதோடு நேற்றைய தினம் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராசாவின் விமர்சனம் தொடர்பாக பேசும்போது கண் கலங்கி நின்றார். இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் எல்லோரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அந்த பகுதியில் காணப்பட்டார்கள்.
இந்த நிலையில், முதல்வர் தொடர்பாக தவறான விமர்சனம் செய்ததற்கான கண்டனங்கள் எழுந்த நிலையில், முதலில் அதனை மறுத்த திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா தற்போது முதலமைச்சர் பெயருக்கு எந்தவிதமான களங்கத்தையும் நான் ஏற்படுத்த முயற்சி செய்யவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். முதலமைச்சர் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.அதோடு என்னுடைய பேச்சு தனிமனித விமர்சனம் கிடையாது பொதுவாழ்வில் இருக்கின்ற இருபெரும் ஆளுமைகளின் மதிப்பீடு என்று தெரிவித்திருக்கிறார். அதோடு அவர் தெரிவித்தது தான் சரி என்கிற ரீதியில் தெரிவித்திருக்கிறார் ராசா. இதுதான் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுகவின் நிலைப்பாடு என்று சொல்கிறார்கள் அரசியல் அறிஞர்கள்.
தமிழக மக்களின் மிகப்பெரிய பிரதிநிதியான முதல்வரை தரம் கெட்ட வார்த்தைகளில் விமர்சனம் செய்து விட்டு அதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்று சொல்லி அவர் முன்பு கூறிய அதே கருத்தை வேறுவிதமாக தற்சமயம் கூறியிருக்கிறார். இதன் மூலம் தமிழக மக்கள் எல்லோரும் அடி முட்டாள்கள் என்றுதான் அவர் சொல்லியிருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்களும் மற்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளித்த போதும் அவர் செய்த தவறை தவறென்று உணர்ந்து கொள்ளாத ஆண்டிமுத்து ராசா தமிழ்நாட்டிற்கு ஒரு மாபெரும் சாபக்கேடு என்று சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
முதல்வர் தொடர்பான விமர்சனம்! ஆண்டிமுத்து ராசா மீண்டும் ஆணவப் பேச்சு!
