Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினம் ஒரு செம்பருத்தி! உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை காணலாம்!

தினம் ஒரு செம்பருத்தி! உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை காணலாம்!

அனைவருடைய வீட்டிலும் வளர்க்கக்கூடிய செடிகளில் ஒன்றாக இருப்பது செம்பருத்தி.பொதுவாக செம்பருத்தி செடியில் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. செம்பருத்தி பூவை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் அதன் மருத்துவ குறிப்பு பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் ஒரு செம்பருத்தி எடுத்து கொள்ள வேண்டும்.அதனை தண்ணீரில் நன்கு அலசி அந்த பூவில் உள்ள நடுவில் இருக்கும் மகரந்தத்தை மட்டும் நீக்கிவிட்டு அந்த இதழ்களை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவதின் மூலம் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றது.

செம்பருத்தி பூவை தினமும் எடுத்துக் கொண்டால் உடம்பில் உள்ள சோர்வுகள் நீங்கும். இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை முற்றிலும் கரைக்க செம்பருத்தி பூவை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

அதனையடுத்து இதய நோயாளிகளுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி மற்றும் ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு போன்ற நோய்களுக்கு மருந்தாக உள்ளது. அதற்கு செம்பருத்தி பூவை பச்சையாகவும் அல்லது நன்கு நிழலில் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்தும் காலை மற்றும் மாலை நேரங்களில் குடித்து வர வேண்டும்.

மேலும் உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கவும் செம்பருத்தி பயன்படுகின்றது. வயிற்றுப்புண் ,வாய்ப்புண்கள் குணமாக செம்பருத்தி பூவை தினந்தோறும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். தோள்கள் மென்மையாக இருக்க செம்பருத்தி பூ பயன்படுகிறது. தோலில் எப்பொழுதும் ஈரம் பதத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த செம்பருத்தி பூ பயன்படுகின்றது.

 

Exit mobile version