சென்னையில் ரூட் போர்டு விழுந்து விபத்து!.அடுத்தடுத்து வாகனங்களில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு! ..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..
சென்னை கத்திப்பாராவில் மாநகரங்களில் பல வாகனங்கள் செல்வதும் போவதுமா இருந்தது.அங்கு வாகன ஓட்டிகளுக்காக ரூட் போர்டு வைக்கப்பட்டிருந்தது.இந்த ரூட் போர்டு மூலமாக தான் பல வாகன ஓட்டிகளுக்கு தெளிவானா பாதைகள் வைக்கப்படிருக்கும்.
இந்நிலையில் நேற்று திடிரென ஒரு பஸ் மோதி வழிகாட்டி பலகை தூண் சரிந்து விழுந்தது.இதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்ப்பட்டது.சென்னையையடுத்த தாம்பரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி நேற்று மதியம் 3 மணியளவில் மாநகர பேருந்து சென்றது.
பரங்கிமலையிலிருந்து ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரெயில் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதிக்கு செல்ல சாலை வளைவில் திரும்பியபோது அதிவேகமாக வந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை வளைவு பகுதியில் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்டு இருந்த ரூட் பலகை ராட்சத இரும்பு தூண் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ரூட் பலகையுடன் ராட்சத தூண் சரிந்து சாலையின் குறுக்கே இருபக்கமாக விழுந்தது.அப்போது கிண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற மினிவேன் மீது ரூட் பலகை விழுந்தது. இதில் ரூட் பலகைக்கு அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கியது.இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முக சுந்தரம் வயது 28படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
ரூட் பலகை விழுந்ததில் சாலையில் கவிழ்ந்த மினிவேன் டிரைவர் ஜான்பீட்டர்(43) மற்றும் ராட்சத இரும்பு தூண் மீது மோதியதில் மாநகர பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியதுடன், முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. மேலும் பேருந்தில் பயணம் செய்த 4 பயணிகள் என 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாலிபரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரூட் பலகை சரிந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகசுந்தரம் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகசுந்தரம் உயிரிழந்துள்ளார். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதனால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.