ஹோட்டலில் மனிதனை போல சர்வராக வேலை செய்யும் ரோபோட்! இணையத்தில் வீடியோ வைரல்!

0
239
#image_title

ஹோட்டலில் மனிதனை போல சர்வராக வேலை செய்யும் ரோபோட்! இணையத்தில் வீடியோ வைரல்!

சீனா நாட்டில் ஓட்டல் ஒன்றில் ரோபோட் இயந்திரம் மனிதனைப் போல சர்வராக வேலை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

உலகம் முழுவதும் தற்பொழுதைய காலத்தில் ஏஐ என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக விரைவாக வளர்ந்து வருகின்றது. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதன் செய்யக் கூடிய செயல்களை சிந்தனைகளை இயந்திரங்களுக்கு கொடுக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

உதாரணமாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிப்பாளர் ஒருவரை சமீபத்தில் உருவாக்கினர். அதே போல பலவிதமான முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் சீனாவில் ஓட்டல் ஒன்றில் ரோபோட் இயந்திரம் சேவை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

சீனா நாட்டில் ஷாங்காய் நகரில் ஓட்டல் ஒன்றில் ரூம் சர்வீஸ் செய்வதற்காக ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த ஓட்டல் அறையில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர் தொலைபேசி மூலமாக உணவை ஆர்டர் செய்கிறார்.

இதையடுத்து சிறிது நேரம் கழிந்து ரோபோட் இயந்திரம் ஒன்று அறையின் வாசலில் வந்து நிற்கின்றது. இதையடுத்து உணவை ஆர்டர் செய்த அந்த வாடிக்கையாளர் ரோபோவின் மேற்பகுதியில் உள்ள திரையில் ஓபன் என்பதை தொடுகிறார்.

ஓபன் என்பதை தொட்டதும் ரோபோவின் மேற்பகுதி திறக்கின்றது. இதையடுத்து அந்த வாடிக்கையாளர் உணவை பெற்றுக் கொண்டதும் மீண்டும் ரோபோவின் மேல்பகுதி மூடிவிடுகிறது. அதையடுத்து அந்த ரோபோ சென்று விடுகின்றது. இந்த காட்சிகள் அனைத்தும் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் இருக்கின்றது.