Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடலூர் முதுநகரில் நள்ளிரவில் சம்சா வியாபாரி வெட்டிக்கொலை!! தந்தை படுகாயம்!!

Graduate girl commits suicide by jumping in front of train!! Police investigation!!

Graduate girl commits suicide by jumping in front of train!! Police investigation!!

கடலூர் முதுநகரில் நள்ளிரவில் சம்சா வியாபாரி வெட்டிக்கொலை, தந்தை படுகாயம்!!

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் சின்ன தைக்கால் பகுதியை சேர்ந்தவர் முகமது முகைதீன். இவருடைய மகன் நூருல்லா சாகித் (வயது 35), சம்சா வியாபாரி.இவர் நேற்று வியாபாரத்தை முடித்து விட்டு நள்ளிரவில் தந்தையுடன் மறுநாள் ரம்ஜான் நோன்பு இருப்பவர்களுக்காக சம்சா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த 2 பேர் அரிவாளால் நூருல்லா சாகித்தை வெட்டினர்.இதை தடுத்த முகமது முகைதீனுக் கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.இதில் பலத்த காயமடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதற்கிடையே இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.

பொதுமக்களை பார்த்த அந்த 2 நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நூருல்லா சாகித் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த முகமது முகைதீனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கட லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா ? அல்லது வேறு ஏதாவது காரணமா? எனவும், கொலை செய்த நபர்கள் யார்? என்பது குறித்தும் துறைமுகம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version