Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமரன் படத்தில் ஒரு காட்சி நீக்கம்!! படக்குழுவினர் விளக்கம்!!

A scene deleted in Amaran!! Crew explanation!!

A scene deleted in Amaran!! Crew explanation!!

அமரன் திரைப்படம்:  2024 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி  இந்த வருட  ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பெரியசாமி  இயக்குனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்து. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் பையோ கிராபியை  மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். இப் படத்தில்  கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார்.

அதாவது அமரன் படத்தில்  சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் போன் நம்பர் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த போன் நம்பர் நிஜத்தில் சென்னையை சேர்ந்த பொறியியல் மாணவர் வாகீசன் என்பவருடையது. எனவே அமரன் படம் வெளியான நாள் முதல் தனக்கு பல போன் கால்கள் வருவதாகவும் அதில் நடிகை சாய் பல்லவி இருக்காங்களா என கேள்வி எழுப்பி தொல்லை செய்வதாக கூறினார். மேலும் இது போன்ற போன் கால்கள் வருவதால் என்னால் சரி வர தூங்க முடிவதில்லை, படிக்கவும் முடியவில்லை ஒரே நாளில் தொடர்ச்சியாக  போன் கால்கள் வருகிறது என்றார். மேலும் அமரன் படக்குழுவிற்கு எந்தவித அறிவிப்பும் இன்றி என்னுடைய போன் நம்பரை திரைப்படத்தில் பயன்படுத்தியதற்கு நஷ்ட ஈடாக ரூ.1.1 கோடி கேட்டு மாணவர் வாகீசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதனால், படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கவும், தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் காட்சியை நீக்கிய நிலையில் புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version