Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓடும் மின்சார ரயிலில் வீர தீர சாகசம் செய்த பள்ளி மாணவ மாணவி! பதைபதைக்கும் வைரல் வீடியோ உள்ளே!

A schoolboy who had a heroic coastal adventure on a running electric train! Inside the viral video!

A schoolboy who had a heroic coastal adventure on a running electric train! Inside the viral video!

ஓடும் மின்சார ரயிலில் வீர தீர சாகசம் செய்த பள்ளி மாணவ மாணவி! பதைபதைக்கும் வைரல் வீடியோ உள்ளே!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைபேட்டை என்ற இடத்தில் ஓடும் மின்சார ரயில் ஒன்றில் பள்ளி மாணவனுடன் சேர்ந்து நானும் உனக்கு சளைத்தவள் அல்ல என்று மாணவி ஓடிவந்து தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. பலரும் இதை பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு பார்ப்போருக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் யாருக்கு நஷ்டம். அவர்களுக்குத்தான் இது அந்த மாணவர்களுக்கு இன்னும் புரியவில்லை. அந்த வீடியோவில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் ஒன்று புறப்பட்டவுடன், மெதுவாக நகர்கிறது.

அப்போது பின்னால் ஓடி வந்த மாணவி முதலில் ரயில் படிக்கட்டில் உள்ள கம்பியைப் பிடித்தபடி சிறிது தூரம் நடைமேடையில் ஓடி வந்து, பின்னர் துள்ளிக்குதித்து ரயிலில் ஏறி, அதன் பின் அதேபோல் படிக்கட்டில் ஒரு கால் வைத்து, நடைமேடையில் ஒரு கால் வைத்து உரசியபடி சாகச பயணத்தை மேற்கொள்கிறார். அதை தொடர்ந்து மாணவியுடன் வந்த சக மாணவனும் அதேபோல் ஏறி பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த சாகசப் பயணத்தை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதன் காரணமாக கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படி கட்டுகளில் தொங்குவது, வாகனம் புறப்பட்டவுடன் ஓடி வந்து ஏறுவது போன்ற சாகசங்களை எல்லாம் முன்பு மாணவர்கள் தான் செய்து வந்தனர். தற்போது நானும் உங்களுக்கு இது போல் செய்கிறேன் என்ற பெயரில் மாணவியும் இவ்வாறு செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version