10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு  ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் !

0
277

10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு  ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் !

கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதினார்கள். நடப்பு ஆண்டில் தான் மாணவர்கள்   அனைவரும் பள்ளிக்கு நேரடி வகுப்பிற்கு சென்று  பொது தேர்வு எழுதினார்கள்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் நாளை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் என்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறுவதற்கு தேதி அறிவித்திருந்த நிலையில். இப்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொத்தம் 9 லட்சம்  மாணவர் மாணவியர் எழுதினார்கள். அவர்களின் விடைத்தாள் மொத்தம் 45 லட்சம் ஆகும். தேர்வு முடிவுகள் அனைத்தையும் நேற்று முன்தினமே இனைய தளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

இருந்தாலும் இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.வரும் ஜூன் மாதம் 20 ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் பகல் 12 மணிக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது .

ஒரே நாளில் இரண்டு வகுப்பு பொதுத்தேர்வு முடிவகளும் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது . இனைய தளத்தில் சென்று முடிவுகளை பார்க்கலாம் .