மக்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்! இனி ஏடிஎம் பாஸ்வர்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம்!
தற்போது இயங்கிவரும் பணம் பரிவர்த்தனைகளில் பயன்படுத்துவது ஏடிஎம் கார்டு அதற்கான கடவுச்சொல்லை பயன்படுத்தினால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் இப்போது புதிய வகை ஏடிஎம் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பெயர் பே ஹவே கார்டு இதன் மூலம் நாம் கடவுச்சொல் இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இந்த கார்ட் என்பது என்ன என்பதை பார்க்கும் பொழுது இந்த கார்ட் ஆனது வைஃபை மூலம் இணைக்கப்பட்டு அதன் மூலம் பணம் வர்த்தனை நடைபெறுகிறது. இந்த கார்டை பயன்படுத்துவதன் மூலம் நாம் அருகில் இருந்தால் போதும் நம்முடைய கார்டில் wi-fi இணைப்பை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம். இது மிகவும் ஆபத்தானது மக்களுக்கு பயன் அளிப்பது என்பதே கேள்விக்குறிதான் ஆனால் தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். இதில் நிறைய தீமைகளும் உள்ளது.
ஒருவரின் கடவுச்சொல் இல்லாமல் பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்றாலும் கார்டு ரீடர் என்னும் இயந்திரத்தை பயன்படுத்தி நான்கு சென்டிமீட்டர் தொலைவில் இருக்கும் நபர்களின் ஏடிஎம் கார்டிலிருந்து நேரடியாக நமது வங்கி கணக்கில் இருக்கு பணத்தை மாற்ற முடியும். தற்போது ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டால் அதனை எளிதான முறையில் பிளாக் செய்ய முடியும் அந்த முறையானது ஏடிஎம் கார்டு ஆனது தொலைந்து விட்டால் தனது வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணில் இருந்து வங்கிக்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும். அந்த செய்தியானது BLOCK CCCC AAAA இவ்வாறு அனுப்ப வேண்டும். இந்த CCCC என்பது தொலைந்து போன உங்கள் ஏடிஎம் கார்டு நான்கு இலக்க எண் என்று அர்த்தம். AAAA உங்கள் வங்கி கணக்கு எண் ஆகும். இந்த குறுஞ்செய்தியை 56 76 26 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். நமது தொலைந்துபோன ஏடிஎம் கார்டு ஆனது பிளாக் செய்யப்படும். இது மிகவும் பாதுகாப்பானது.
தற்போது வரவுள்ள பேஹாவே தொழில்நுட்பத்தில் நமது ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டால் தொடர்ந்து 15 முறை அந்த கார்டில் இருந்து பணத்தை சுலபமாக ஒரு வங்கி க் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துகொள்ளலாம் இது மிகவும் ஆபத்தானது. இந்த ஆபத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு இதற்கென்று ஒரு தனித்துவமான பர்ஸ் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.அதில் ஏடிஎம் கார்டை வைத்து கொண்டால் பண மோசடி நடைபெறுவதை தடுக்கலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.