CRIME: இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் தேனியில் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தங்கம்மாள் புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் அவருக்கு வயது 37 ஆகிறது. முருகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இதனால் அவரை விட்டு பிரிந்து அவரது மனைவி ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
மணிகண்டன் தனது தந்தையுடன் சேர்ந்து வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தாயர் தங்கம்மாள் புரத்தில் உள்ள வீட்டை கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வீட்டை பூட்டு போட்டு விட்டு தனது மகள் ஊருக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் 13 ஆம் தேதி அந்த வீட்டில் துர்நாற்றம் வீச ஊர்மக்கள் அந்த வீட்டை திறந்து பார்க்கும் போது உள்ளே உடல் அழுகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
அது மணிகண்டன் தான் என அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்து, அந்த உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மணிகண்டன் உயிருடன் அந்த ஊரில் வருவதை பார்த்து ஊர் மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். எனவே, இந்த தகவல் பொலிசாருக்கு கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு கடமலைக்குண்டு போலீசார் மணிகண்டன் வீட்டில் இறந்து கிடந்தது யார், மணிகண்டன் அப்பாவிடம் கைபேசி இல்லை. ஒருவேளை அவர் தான் வீட்டில் உயிரிழந்து கிடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.