Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டப் பகலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!

A shocking incident that took place in broad daylight! Police registered a case!

A shocking incident that took place in broad daylight! Police registered a case!

பட்டப் பகலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள சிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் இவருடைய மனைவி வசந்தி(55). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அந்தப் பகுதிக்கு வந்த இரண்டு வாலிபர்கள் கடையில் பொருள் வாங்குவது போல் நடித்துள்ளனர் அதன் பிறகு வசந்தியின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் வசந்தி சற்று கவனத்துடன் செயினை பிடித்துக் கொண்டார். பாதி செயினை பறித்துக் கொண்டு அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர் மேலும் இதுபற்றி வசந்தி தாரமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version