அமெரிக்காவில் லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அந்த காரில் இருந்த இப்ரி காம்ஸ் என்கிற 3 வயது பச்சிளம் குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தது. மேலும் கார் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய மர்ம நபர்கள் யார்? அதற்கான பின்னணி என்ன? என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
அமெரிக்காவில் அரங்கேறிய மனதை உலுக்கும் சம்பவம்
