விஜய்யின் அரசியல் குறித்த குட்டி ஸ்டோரி!!

0
110
A short story about Vijay's politics!!

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஜய் மக்கள் இயக்கமாக முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் மக்களுக்கு பல நலத்திட்டங்களை நடிகர் விஜய் செய்து வந்துள்ளார்.

மேலும், தற்பொழுது விஜய் மக்கள் இயக்கம் என்பதனை முறையாக தமிழக வெற்றிக் கழகம் என பெயர் மாற்றம் செய்த அரசியலில் முழுமையாக இறங்கியுள்ளார் நடிகர் விஜய் அவர்கள்.

நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சிக்கு ” தமிழக வெற்றிக் கழகம்” என பெயர் சூட்டிய பொழுது பெயரில் பிழை குற்றங்கள் உண்டு என பலர் குற்றம் சாட்டினர். அதனை கண்டு வருந்தாமல் கட்சியின் பெயரில் உள்ள பிழைகளை திருத்திக்கொண்டார் விஜய் அவர்கள்.

அதனைத் தொடர்ந்து தனது கட்சிக்கான கொடியினையும் அறிமுகம் செய்தார். அதிலும் பல முரண்பாடான கருத்துக்கள் வெளிவந்தன. எனினும் எதற்கும் செவி சாய்க்காமல் தன்னுடைய பாதை இதுதான் என முடிவு செய்து தன்னுடைய லட்சியத்தில் மட்டும் கவனத்தை செலுத்தி வந்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள்.

இன்று( 27.10.2024 ) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டினை மாநில அளவில் அரங்கேற்றி காட்டியுள்ளார் இக்கழகத்தின் தலைவர். இந்த மாநாட்டில் இவர்கள் எதிர்பார்த்ததை விட பொதுமக்களும், ரசிகர்களும் மற்றும் தொண்டர்களும் அதிக அளவில் வருகை தந்து இந்தியாவில் நடைபெற்ற மாநாடுகளில் இதுவரை இல்லாத அளவாக அணிதிரண்டு வந்துள்ளனர்.