வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

0
157
#image_title

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

தீர்வு 01:-

*மாம்பூ
*சீரகம்

ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் நீர், 1 கைப்பிடி அளவு மாம்பூ(மாமரப் பூ) சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து அதில் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி வாயை கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலி, ஈறு வீக்கம் ஆகிய பிரச்சனைகள் குணமாகும்.

தீர்வு 02:-

*மிளகு
*இஞ்சி

ஒரு வாணலியில் சிறிது மிளகு சேர்த்து மிதமான தீயில் வறுத்து இடித்துக் கொள்ளவும்.

ஒரு துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ் அளவு நீரில் இடித்த மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து ஆறவிட்டு வாயை கொப்பளித்தால் தொண்டை புண், பல் வலி முழுமையாக குணமாகும்.

தீர்வு 03:-

*இலவங்கம்
*உப்பு
இலவங்கம் மற்றும் கல் உப்பு சம அளவு எடுத்து வறுத்து பொடித்துக் கொள்ளவும். இதை 1 கிளாஸ் வெந்நீரில் சேர்த்து கலந்து வாயை கொப்பளித்து வந்தால் தொண்டை வலி, வாய்ப் புண், பல் வலி அனைத்தும் குணமாகும்.

தீர்வு 04:-

*மோர்
*மாம்பூ
*சீரகம்
*வெந்தயம்

ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் ஓமம் வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.

அடுத்து மாம்பூ சிறிது உலர்த்தி பொடித்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ் மோரில் பொடித்த சீரகம், வெந்தயம் மற்றும் மாம்பூ பொடியை சேர்த்து கலந்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும்.