வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!!
இன்றைய உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். பணம் இல்லாத மனிதரை இந்த உலகம் மதிக்காது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து 30% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
ஆனால் பலர் சிறிதளவு கூட சேமிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். சிலருக்கு பணத்தை சேமிக்க முடியவில்லை என்று வருத்தும். சிலருக்கு சேமித்த பணத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்று வருத்தம்.
எவ்வளவு தன் சம்பாதித்தாலும் கடன் வாங்கும் சூழல் தான் ஏற்படுகிறது என்று வருந்தும் நபர்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்.
நம் வீட்டில் மஹாலட்சுமி தாயார் குடி இருக்க வேண்டும். அவர் மனம் குளிரும் படி செய்ய வேண்டும். எந்த ஒரு வீட்டில் மஹாலட்சுமி தாயார் குடி இருக்கிறாரோ குடி இருக்கிறாரோ அங்கு தான் பணக் கஷ்டம் நீங்கி செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
பணம், செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க என்ன செய்ய வேண்டும்?
*இயற்கையாக வாசனை நிறைந்த பொருட்களில் ஏலக்காய்,பச்சை கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை பணம், நகை வைத்திருக்கும் இடங்களில் வைக்க வேண்டும். காரணம் இயற்கை வாசனை நிறைந்த இந்த பொருட்கள் எல்லாம் மஹாலட்சுமி தாயாருக்கு பிடித்தமானவை ஆகும்.
அடுத்து நம் வீட்டில் பண வரவு தடையின்றி வந்து கொண்டிருக்க எளிய பரிகாரம் ஒன்றை செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்:-
*காட்டன் துணி
*மஞ்சள்
*பச்சைக் கற்பூரம்
*ஏலக்காய்
*மஞ்சள், குங்குமம்
*சோம்பு
*குப்பைமேனி வேர்
பரிகாரம் செய்யும் முறை:-
முதலில் வீட்டு பூஜை அறையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும். அங்கு ஒரு வெள்ளை காட்டன் துணி எடுத்து மஞ்சள் பூசிக் கொள்ளவும்.
பின்னர் அதில் எடுத்து வைத்துள்ள சோம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1 குப்பை மேனி வேர் எடுத்து அதில் மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து ஒரு சிறிய மூட்டை போல் கட்டி கொள்ளவும்.
பின்னர் கடவுள் படங்கள் பக்கத்தில் வைத்து பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். மூட்டையில் உள்ள பொருட்களின் வாசம் குறைந்து விட்டால் மீண்டும் மாற்றி வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் வீட்டில் கடன் தீர்ந்து பணவரவு அதிகரிக்கும்.