Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் பணக் கஷ்டம் நீங்க எளிய பரிகாரம்!! 100% தீர்வு கிடைக்கும்!!

#image_title

வீட்டில் பணக் கஷ்டம் நீங்க எளிய பரிகாரம்!! 100% தீர்வு கிடைக்கும்!!

உங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவீர். சம்பாதிக்கும் பணத்தில் சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைப்பது என்பது மிகவும் முக்கியம். ஒருவேளை அவ்வாறு செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

நம்மில் சிலர் சிறுக சிறுக பணத்தை சேமித்தும் ஏதேனும் ஒரு வழியில் அதற்கு செலவு வந்து விடுகிறது. இந்த பணக் கஷ்டம் நீங்கி வீட்டில் செல்வம் கொழிக்க எளிய பரிகாரம் ஓன்றை செய்தால் போதும்.

பணக் கஷ்டம் நீங்க பரிகாரம்:-

இந்த பரிகாரம் செய்வதற்கு முன் வீடு மற்றும் பூஜை அறையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழைய வேண்டும். பூஜை அறைக்குள் ஒரு தட்டு வைத்து அதில் சிறிதளவு பெருஞ்சீரகம், 2 அல்லது 3 ஏலக்காய், சிறு துண்டு பச்சை கற்பூரம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வெள்ளை காட்டன் துணி எடுத்து அதில் மஞ்சள் பூசிக் கொள்ளவும். அதை உலர்த்தி பின்னர் எடுத்து வைத்துள்ள பெருஞ்சீரகம் + ஏலக்காய் + பச்சை கற்பூரம் உள்ளிட்டவற்றை அந்த மஞ்சள் துணியில் சேர்த்து சிறு மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த மூட்டையை உங்கள் வீட்டின் குபேர மூலையில் வைத்து தீபம் காட்டி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்கத் தொடங்கும்.

Exit mobile version