Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாங்கிய கடன் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

#image_title

வாங்கிய கடன் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

நேரம், காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். இவ்வாறு உழைத்து வரும் பணத்தில் ஒரு பகுதி சேமித்து வைக்க வேண்டும். ஆனால் இவ்வாறு நாம் சேமிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் சிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த கடன் பிரச்சனை நீங்கி வீட்டில் பண வரவு அதிகரிக்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவது நல்லது.

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்:-

முதலில் விரலி மஞ்சள் 48 என்ற அளவில் புதிதாக வாங்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். வெள்ளிக்கிழமை காலை ஒரு சிறிய தட்டில் சிறிய சிவப்புத்துணி விரித்துக் கொள்ளவும்.

மஹாலட்சுமி தாயாருக்கு பூ வைத்து விளக்கு ஏற்றி பின்பு வாங்கி வந்த விரலி மஞ்சளில் ஒன்றை எடுத்து கையில் எடுத்துக் கொள்ளவும். பின்னர் ” எங்கள் கடன் விரைவில் தீர வேண்டும்” என்று நன்றாக பிரார்த்தனை செய்து அதை அந்த சிவப்புத் துணியில் வைக்கவும்.

இதேபோல் தினமும் ஒவ்வொரு மஞ்சளாக 48 நாட்கள் தொடர்ந்து அந்த சிவப்புத் துணியில் வைக்கவும்.

அதை முடிச்சுப் போடாமல் அப்படியே பூஜை அறையில் திறந்தே வைத்து மஞ்சளை தினமும் ஒன்றன் மீது ஒன்றாக வைக்கவும். 48 வது நாள் இந்த 48 மஞ்சளையும் மஞ்சள் நூலில் மாலையாக கட்டி அருகில் உள்ள கோயிலில் மஹாலட்சுமி தாயாருக்கு சாற்றி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் நிச்சயம் கடன் சுமை தீரும்.

Exit mobile version