Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளநரையை ஒரே வாரத்தில் போக்கும் அற்புத மருந்து:!! ஒருமுறை பயன்படுத்திப்பாருங்கள்!!

இளநரையை ஒரே வாரத்தில் போக்கும் அற்புத மருந்து:!! ஒருமுறை பயன்படுத்திப்பாருங்கள்!!

தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்சனை இளநரையாகும்.இந்த இளநரையால் இளம் வயதினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.பல விளம்பரங்களை பார்த்து பலவித ஹேர் டையை பயன்படுத்தியும் பயனில்லை என்று கவலைப்படுபவருக்கு ஓர் அற்புத மருந்து மருதாணியும் நீலி அவுரி இலையுமாகும்.இந்த மருதாணியும் நீலி அவுரி இலையையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும் உங்கள் இளநரை,முதுநரை போன்ற அனைத்து நரைமுடி பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

மருதாணி மற்றும் அவுரி இலையை எவ்வாறு சரியாக பயன்படுத்துவது??

முதலில் மருதாணி இலையையும் மற்றும் அவுரி இலையையும் தனித்தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு தலை குளிக்கும் முதல் நாள் இரவே உங்கள் முடிக்கு தகுந்தார் போல் மருதாணி பொடியை எடுத்து தண்ணீரில் கலந்து வைத்து விட வேண்டும்.சுமார் 6 மணி நேரமாவது இந்த மருதாணி பொடியானது ஊற வேண்டும்.பின்பு மறுநாள் காலையில் ஊற வைத்த மருதாணி பொடியை நன்றாக தலைமுடியில் தேய்த்து 15-லிருந்து 20 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.பிறகு தலைமுடியை சீகைக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பை கொண்டு நன்றாக அலசிவிட்டு முடியை நன்றாக உலர்த்த வேண்டும்.ஹேர் டிரையரை பயன்படுத்தக் கூடாது.

தலைமுடி நன்றாக உலர்ந்தவுடன் அவுரி பொடியை தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கலந்து உடனடியாக தலையில் தேய்த்து 15லிருந்து 20 நிமிடம் உலர்த்தி சீகக்காய் போன்று ஏதும் தேய்க்காமல் அப்படியே தலையை நன்றாக அலசி விட வேண்டும்.இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால்
நரைமுடி விரைவில் முழுமையாக கருமுடியாக மாறிவிடும்.முதல் முறை பயன்படுத்தினாலே
வித்தியாசம் நன்றாகத் தெரியும்.


குறிப்பு:

அவுரி பொடியை தண்ணீரில் கலந்து ஊற வைத்து விட்டால் அதன் தன்மை மாறக்கூடும் எனவே பொடியை தண்ணீரில் கலந்தவுடன் தேய்க்க வேண்டும்.

மருதாணி மற்றும் அவுரி இலைகளை வெயிலில் காய வைக்க கூடாது.நிழலில் மட்டுமே உலர்த்த வேண்டும்.

மேலே கூறிய முறைகளை சரியாக செய்தாலே உங்கள் இளநரைக்கு விரைவில் தீர்வு கிட்டும்.

Exit mobile version