1 முறை இதை மட்டும் தடவுங்கள் சேற்றுப்புண் இருக்கும் இடம் தெரியாமல் போகும்!!

0
206
A simple way to prevent mudslides

1 முறை இதை மட்டும் தடவுங்கள் சேற்றுப்புண் இருக்கும் இடம் தெரியாமல் போகும்!!

சேற்றபுண்ணானது அதிகமாக தண்ணீரில் இருப்பவர்களுக்கு வந்துவிடும்.மழைக்காலங்களில் இந்த பாதிப்பானது அதிகப்படியானவருக்கு இருக்கும்.ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு கால் விரல்களில்  ரத்தப்போக்கானது சீராக இல்லாமல் இருப்பதால் சேற்றுப்புண் வந்துவிடும். சேற்றுப்புண் வந்து விட்டால் அந்த இடம் மருத்து போவது போல் ஆகிவிடும்.

போதுமானளவு ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச்சத்து இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.ஒரு சிலருக்கு இது புண்ணாகவே மாறி அரிப்பு எரிச்சல் போன்றவை உண்டாகிவிடும்.அதேபோல தண்ணீரை வெதுவெதுப்பாக்கி அதில் உப்பு சேர்த்து கால்களை 10 நிமிடம் வைத்து வர கிருமிகள் எல்லாம் அழிந்து காலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.மேலும் காலணி மற்றும் ஷூகளை மிகவும் இறுக்கமாக போடுவதையும் தவிர்க்க வேண்டும்.

வீட்டு வைத்தியம் முறையில் சேற்றுப் புண்ணை சரி செய்வது எப்படி:

தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து அதில் கற்பூரம் ஒன்றை போட வேண்டும்.
கால் விரல்களை நன்றாக துடைத்து விட்டு இதை தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு மருதாணியுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை சேற்றுப்புண் உள்ள இடத்தில் தடவலாம்.
இவ்வாறு செய்து வந்தால் உடல் உஷ்ணம் மற்றும் சேற்றுப்புண் இதை இரண்டும் சரி செய்ய உதவும்.

இதேபோல தேன் மற்றும் மஞ்சள் கலவையை சேற்றுப்புண் உள்ள இடத்தில் போடலாம்.இதையெல்லாம் செய்துவர சேற்றுப்புண் விரைவில் குணமாகும்.