Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலாவை கண் கலங்க வைத்த ஒரு பாடல்.. அது எந்தப் படம்ன்னு தெரியுமா?

#image_title

பாலாவை கண் கலங்க வைத்த ஒரு பாடல்.. அது எந்தப் படம்ன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும். தமிழ் எடுத்த படங்களான சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற படங்கள் மக்கள் கண்களிலேயே கண்ணீர் வரவழைத்தது. அந்த அளவிற்கு இவருடைய படங்களின் கதாபாத்திரங்கள் அமையும்.

தற்போது, நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை பாலா இயக்கி வருகிறார். முதன்முதலாக இப்படத்தில் நடிகர் சூர்யாதான் நடிக்க இருந்தது. ஆனால், இதற்கிடையில் பாலாவிற்கும், சூர்யாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் இப்படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார்.

பாலா படம் என்றாலே சில நடிகர், நடிகைகள் அஞ்சுவார்கள். ஏனென்றால் அவர் படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டுதான் நடிக்க வேண்டி இருக்கும். அதே சமயம் அந்தப் படம் படமும் வெற்றி பெற்றுவிடும்.

பாலாவையே சண்டிவீரன் படத்தில் நடந்த ஒரு சம்பவம் அவரை கண்கலங்க வைத்துவிட்டதாம். சண்டிவீரன் படத்தை இயக்குனர் சற்குணம் இயக்கினார். இப்படத்தில் அதர்வாவும், ஆனந்தியும் நடித்தனர்.

இப்படத்திற்காக ஒரு பாடலை மோகன்ராஜன் எழுதினார். இவரிடம், இயக்குனர் சற்குணம் தண்ணீரை பற்றிய ஒரு பாடலை எழுதுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது, இவர் எழுதிய பாட்டு வரியில், தாய்பாலும் தண்ணீரும் ஒண்ணாதான் இருந்துச்சு என்று பாடலை எழுதி கொடுத்தாராம். இந்தப்பாடலை சின்னபொண்ணு மற்றும் அந்தோனிதாஸ் பாடினார்கள்.

இப்பாடல் எடிட்டிங்கின்போது, மின்விளக்குகளை ஆப் செய்து விட்டு இயக்குநர் பாலாவிற்கு போட்டு காண்பிக்கப்பட்டது. பாடல் முடிந்த பிறகு, விளக்குகளை ஆன் செய்த போது, பாலாவை பார்த்தவர்கள் ஒரு நிமிடம் மவுனமாகிவிட்டனர். ஏனென்றால், பாலா கண்களிலிருந்து கண்ணீருடன் இருந்தாராம். மேலும், திரும்ப, திரும்ப விளக்கை அணைத்துவிட்டு பாடலை கேட்டுக்கொண்டிருந்தாராம். என்ன ஒரு வரிகள் என் கண்ணே கலங்கிவிட்டது என்று அந்தப் பாடலை எழுதியவரையும், பாடியவர்களை பாலா பாராட்னாராம்.

Exit mobile version