தீபாவளி பண்டிகை காரணமாக வருடந்தோறும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து இயக்கப்படும். அதை தொடர்ந்து இந்த வருடமும் வருகின்ற 31 தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை காரணமாக அரசு நான்கு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.
இதனால் மக்கள் மேலும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஆனால் இந்த ஆண்டு எத்தனை சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகத நிலையில் தற்பொழுது ஆலோசனை நடந்து கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆலோசனை காரணமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மொத்தமாக 14,086 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் சென்னையில் இருந்து 11,176 சிறப்பு பேருந்துகளும் மற்றும் 2,910 சிறப்பு பேருந்து பிற மாவட்டங்களில் இருந்தும் இயக்கப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் நவம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சென்னை திரும்ப வசதியாக 9,441 பேருந்துகளை இயக்க பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்தின் மூலம் 3 நாட்களில் சுமார் 5.83 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு பேருந்து பண்டிகை காலங்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது.