வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ரூ.10 கோடியில் சிறப்பு திட்டம்!!முதல்வர் அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களையும் அவர்களுடைய வழித்தோன்றல்களையும் சிறப்பிக்கும் வண்ணம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அயலக தமிழர் தினத்தை துவங்கி வைத்து 4 ஆவது ஆண்டு விழாவையும் சிறப்பாக நடத்தி கொடுத்துள்ளார். இந்த அயலக தமிழர் தினத்தின் போது வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழ் தோன்றல்களுக்கு தமிழ் மொழியையும், தமிழ் கலைகளையும் மற்றும் தமிழ் பண்ணிசைகளையும் கற்றுத் தரும் நோக்கில் 100 ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை நேரடியாக ரூ.10 கோடி செலவில் நியமிக்க இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பயிலக தமிழர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு க ஸ்டாலின் பேசியதாவது :-

வெளிநாடுகளில் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் பாடுபட்ட தமிழர்கள் மற்றும் அவர்களுடைய வழி தோன்றல்கள் வாழ்வு மேம்பட மற்றும் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவிற்கான அந்நிய செலாவணியை ஈட்டி தரக்கூடிய தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் அயலக தமிழர் தினம். தற்பொழுது 4 ஆவது ஆண்டு நடைபெறுகிறது. ஏதோ சந்தித்தோம் பெருமைகளை பேசினோம் கலைந்து சென்றோம் என்று இல்லாமல் , இதற்கு முன் வகுக்கப்பட்ட திட்டங்கள் சரிவர பின்பற்றப்படுகிறதா அயலகத்தில் வாழக்கூடிய தமிழர்களுக்கு மேலும் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை கலந்துரையாடவே இந்த தினம் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் வழி தோன்றல்களை கண்டறிந்த அவர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு அழைத்து வந்து மண்ணின் பெருமையை உணர செய்யும் திட்டமே ” வேர்களை தேடி ” மேலும் இத்திட்டத்தின் மூலம் 157 தமிழர்கள் தாய் மண்ணிற்கு வந்துள்ளனர் என்றும் தற்பொழுது 38 தமிழர்கள் இந்த விழாவில் பங்கு கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

26,700-க்கும் அதிகமானோர் இதுவரை அயலக தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்திருப்பதாகவும் அவர்களுடைய குடும்பங்களுக்கு காப்பீடு, திருமண உதவித்தொகை, கல்வி உதவித் தொகை மற்றும் ஓய்வூதியம் என பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழ் வழி தோன்றல்களுக்கு நேரடியாக தமிழ் சங்கங்களுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ் மொழியையும், தமிழரின் நாட்டுப்புற கலைகளையும், தமிழ் பண்ணிசைகளையும் பயிற்றுவிப்பதற்காக 10 கோடி ரூபாயில் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version