தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

0
219
A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு வண்டி எண் 06190 என்ற ரயில் வரும் 18 ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை மூன்று மணி அளவில் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

மேலும் இந்த ரயிலானது மதுரை ,பழனி ,கோயம்புத்தூர் ,சேலம் வழியாக சென்று வியாழக்கிழமை மதியம் 2.30மணிக்கு தானப்பூர் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இந்த ரயில் மறுமார்க்கத்தில் தானாப்பூர் நெல்லை சிறப்பு வண்டி எண் 06189 என்ற ரயில் வரும் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.50மணிக்கு புறப்பட்டு சேலம் ,கரூர் ,திண்டுக்கல் வழியாக 24 ஆம் தேதி அதிகாலை 4.20மணிக்கு நெல்லை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  இந்த சிறப்பு ரயிலானது கோவில்பட்டி ,விருதுநகர் ,மதுரை ,திண்டுக்கல் ,ஒட்டன்சத்திரம் ,பழனி ,பொள்ளாச்சி ,கோவை ,போத்தனூர் ,ஈரோடு, சேலம்,திருப்பூர்,ஜோலார்பேட்டை ,அரக்கோணம் ,பெரம்பூர் ,கூடூர் ,கவாலி ,நெல்லூர் ,ஓங்கோல் ,பாபட்லா ,தெனாலி ,விஜயவாடா ,குடிவாடா ,நகர் ,தனுகு,நீடாவாலு ,மொகமெக் ,பட்னா ,பக்தியார்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.

 இந்த ரயில்களில் இரண்டு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் ,நான்கு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ,ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பேட்டிகள் இணைக்கப்படும் எனவும் தெற்கு  ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.