Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு ஸ்பூன் அரிசி இருந்தால் போதும்! உங்கள் கருத்த முகத்தை வெள்ளையாக்கும் க்ரீம் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!!

A spoonful of rice is enough! You can now prepare your own face whitening cream at home!!

A spoonful of rice is enough! You can now prepare your own face whitening cream at home!!

ஒரு ஸ்பூன் அரிசி இருந்தால் போதும்! உங்கள் கருத்த முகத்தை வெள்ளையாக்கும் க்ரீம் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!!

முகம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற ஆசை பெண்கள் பலருக்கு இருக்கிறது.ஆனால் அனைவருக்கும் முகத்தின் நிறம் வெள்ளையாக இருப்பதில்லை.இதனால் முகத்தை வெள்ளையாக்க செயற்கையான பொருட்களை முகத்திற்கு அப்ளை செய்கின்றனர்.இதனால் பக்க விளைவுகள் தான் ஏற்படும்.

எனவே முகத்தை வெள்ளையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி – ஒரு தேக்கரண்டி
2)பால் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.அரிசி நன்கு ஊறி வர வேண்டும்.

இந்த அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் போட்டு காய்ச்சாத பால் 2 தேக்கரண்டி அளவு ஊற்றி நன்கு கலக்கவும்.

இவ்வாறு செய்தால் அரிசி க்ரீம் தயார்.இதை முகம் முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வந்தால் முக கருமை நீங்கி முகம் பொலிவாக காணத் தொடங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி – 1 தேக்கரண்டி
2)கேரட் – 1 துண்டு
3)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைக்கவும்.பிறகு ஒரு துண்டு கேரட்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசி,கேரட் துண்டுகள் சேர்த்து மைய்ய அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் போட்டு 1/4 தேகர்ந்து கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்தால் முகத்தை ஜொலிக்க வைக்கும் க்ரீம் தயார்.

இந்த க்ரீமை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவவும்.இவ்வாறு தினமும் காலை,இரவு நேரத்தில் செய்து வந்தால் முகக் கருமை நீங்கி பொலிவாகும்.

Exit mobile version