தோல் சம்பந்தப்பட்ட சரும பிரச்சனைகளுக்கும் ஒரு கல் உப்பு போதும்!! நிரந்தர தீர்வு!!
நம்மில் பலருக்கு தோல் அரிப்பு, வெண்படை, கரப்பாண், சிரங்கு, தேமல் போன்ற பலவகையான நோய்கள் இருக்கும். இந்த தோல் நோய்கள் இருப்பவர்கள் நம்முடன் பேசக்கூட தயங்குவார்கள். இந்த செய்தி குறிப்பில் பலவகையான தோல் நோய்களில் இருந்து விடுபட சில முக்கிய மருத்துவ குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தோல் நோய்கள் வருவதற்கு சில காரணங்கள் உள்ளது. அந்த காரணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தோல் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:
* தோல் நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடலில் அதிக கழிவுகள் தேங்கி இருப்பது தான்.
* அடுத்து மிக முக்கிய காரணம் ஜங்க் புட்கள் எனப்படும் துரித உணவுகளை அதிக அளவில் உண்பது.
* அடுத்து மலம் சரியாக கழிக்காமல் இருப்பதும் முக்கிய காரணம்
* கடைசியாக நம் உடலில் இருக்கும் வியர்வை வெளியேறாமல் இருப்பதால் இரத்தத்தில் டாக்ஸின் அளவு அதிகரித்து விடுகின்றது. இதனாலும் எளிமையாக தோல் நோய்கள் ஏற்படுகிறது.
இந்த தோல் நோய்களை சரி செய்வதற்கான சில குறிப்புகள் பின்வருமாறு:
குறிப்பு 1:
தோல் நோய்களை சரி செய்வதற்கான எண்ணெய்
இந்த எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
* குப்பைமேனி இலை பொடி – 2 டீஸ்பூன்
* வேப்பிலை பொடி – 2 டீஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் – 100 மிலி
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயுடன் குப்பைமேனி இலை பொடி மற்றும் வேப்பிலை பொடியை சேர்ந்து கலந்து கொள்ளவும். பிறகு அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.
* நன்கு கொதித்த பிறகு இறக்கி அதை வடிகட்டி வைத்து கொள்ளவும். சூடு ஆரிய பிறகு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும்.
இந்த எண்ணெயினை அரிப்பு உள்ள இடத்தில் தினசரி தேய்த்து வந்தால் அரிப்பு முற்றிலும் நீங்கும்.
குறிப்பு 2
குறிப்பு இரண்டில் நாம் பார்க்க கூடிய பொருள் சோற்றுக் கற்றாலை ஜெல்.
இயற்கையாக கிடைக்கும் இந்த சோற்றுக் கற்றாலை ஜெல்லை எடுத்து உங்கள் உடலில் அரிப்பு உள்ள இடங்களில் தேய்த்து 10 அல்லது 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் அரிப்பு விரைவில் குறையும்.
குறிப்பு 3
குறிப்பு மூன்றில் வெற்றிலையை வைத்து தோல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்:
* காம்பு நீக்கப்பட்ட வெற்றிலை – 1
* மிளகு – 3
* உப்பு – ஒரு கல்
செய்முறை :
காம்பு நீக்கப்பட்ட வெற்றிலை 1, மிளகு 3, கல் உப்பு 1 இந்த மூன்றையும் சேர்த்து சாப்பட வேண்டும். தினசரி காலை, மாலை என இரண்டு வேலைகளிலும் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.
குறிப்பு 4
உடலில் தேங்கியுள்ள நச்சு கழிவுகளை எவ்வாறு சரிசெய்து தோல் நோய்களை குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
இதற்கு தேவையான.பொருள்கள்:
விளக்கெண்ணெய் 50 மிலி
செய்முறை
அதிகாலையில் எழுந்தவுடன் 50 மிலி விளக்கெண்ணெயை வெறும் வயிற்றில் வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மலம் நன்றாக வெளியேறும். மேலும் தேவையில்லாத கழிவுகள் வெளியேறும்.
குறிப்பு 5
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா பொடியின் மூலமும் தோல் நோய்களை சரி செய்யலாம்.
செய்முறை
இரவு உணவு உண்ட பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் திரிபலா பொடியை நன்கு கலந்து குடிக்க வேண்டும்.
இதனை செய்வதால் மலக் குடல்களில் இருக்கும் மலங்கள் அனைத்தும் வெறியேறிவிடும். உடலில் உள்ள மலங்கள் நச்சு கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடுவதால் தோல் நோய்கள் விரைவாக குறைகிறது.
தோல் நோய்கள் குணமாக சில உணவு பொருட்கள் உள்ளது. அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.
* காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் அருந்துதல்.
* நார்ச் சத்துக்கள் உள்ள உணவுகள் அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.
* கொய்யாப் பழம், பப்பாளி பழம், வாழைப் பழம் போன்ற பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தோல் நோய்கள் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்
* கருவாடு
* கம்பு
* சோளம்
* வாழைக்காய்
* புளி
* பாகற்காய்