Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊழல்வாதிகளுக்கு வலுவான தாக்குதல்… பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!!

#image_title

ஊழல்வாதிகளுக்கு வலுவான தாக்குதல்… பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!!

எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி தெரிவித்தது குறித்து அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் வாரிசு அரசியலுக்கு எதிரான கட்சி என்றும் கூறி வருகின்றனர்.

கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சி உள்ளிட்டவை தொடங்கி ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகளை தங்கள் அரசு மேற்கொண்டதாகவும் பாஜகவினர் பெருமிதம் கொள்கின்றனர்.

அதேசமயம் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து ஊழல் செய்வதே பாஜகதான் என்று விமர்சிக்கின்றனர். கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொள்ளும் பாஜகவினர், மக்களை அல்லல்படுத்தினார்களே தவிர கருப்பு பணம் ஒழிந்த பாடில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தநிலையில் தான், எனது அடுத்த ஆட்சியில் ஊழலை மேலும் ஒழிப்பேன் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு கேளியும் செய்வதாக தெரிவித்துள்ளார் அவர்.

ஊழல் செய்யும் பாஜக ஆட்சியில் அது எப்படி ஒழியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி மேலும் மேலும் பல பொய் வாக்குறுதிகளை கொடுப்பதாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன.

Exit mobile version