185 மதிப்பெண்கள் எடுத்ததை கேக் வெட்டி கொண்டாடிய மாணவன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
கடந்த மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 185 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மாணவன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 9.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். பெரம்பலூர் மாவட்டம் மொத்த தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து அனைத்து பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் அதாவது அனைத்து பாடங்களிலும், குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்ற மாணவன் கேக் வெட்டி கொண்டியுள்ளார். இதை வீடியோவாக எடுத்து இணையத்திலும் பதிவேற்ற அந்த வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த மாணவன் நவீன் கரண் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று 185 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆகியுள்ளார். இதையடுத்து தான் ஜஸ்ட் பாஸ் ஆனதை மாணவன் நவீன் கரண் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்ற இந்த வீடியோவை கண்டவர்கள் அனைவரும் மாணவனின் பாசிட்டிவ் மனப்பான்மையை பலரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.