Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவன்…மாணவனின் செயலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவன் பள்ளிக்கு மது அருந்திவிட்டு போதையில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுவிற்கு பலரும் அடிமையாகிவிட்டேன் அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் அதிகளவில் மதுவிற்கு அடிமையாகி கிடக்கின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் அதிகமாக உபயோகித்து வருகின்றனர், இது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேலம் பகுதியில் பள்ளி மாணவன் போதையில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது, அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் நேற்றைய தினம் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியபடியே வந்ததாக கூறப்படுகிறது.

போதையில் பள்ளிக்கு வந்த அந்த மாணவன் நிலை தடுமாறி அங்குள்ள மரம் ஒன்றின் அருகில் விழுந்து கிடந்துள்ளான். இதனை கண்ட ஆசிரியர்கள் உடனே ஓடிவந்து அந்த மாணவனை எழுப்பினர், பின்னர் அந்த மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மாணவனுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறி அவனது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது பள்ளியில் நடைபெற்று இருக்கும் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version