Artificial intelligence: அமெரிக்காவில் மாணவர் ஒருவர் வீட்டுப்பாடம் செய்ய ஏ.ஐ.(Artificial intelligence) உதவியை நாடியபோது மாணவனை மிரட்டி இருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி தற்போது உலக அளவில் வளர்த்து வருகிறது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் ஏ.ஐ.(Artificial intelligence) தாக்கம் அதிகரித்து வருகிறது. மனிதன் ஒரு பொருளை படைக்கும் திறன் கொண்டவன். ஆனால் இயந்திரத்திற்கு படைக்கும் திறன் இருக்காது அதை பூர்த்தி செய்வதே (Artificial intelligence) AI ஆகும்.
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தற்போது அதிக அளவில் கல்வியில் பயன் படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட AI மூலம் ஆசிரியர்கள் உருவாக்கப்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த AI தொழில்நுட்பம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்றாலும் கூட அவைகள் மனிதனை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை மேலும் மனிதனின் உதவி இன்றி இயங்கக் கூடியவை ஆகும்.
அந்த வகையில் அமெரிக்காவில் மாணவர் ஒருவர் வீட்டுப்பாடம் செய்ய ஜெமினி என்ற கூகுளின் நுண்ணறிவு உதவியை அந்த மாணவன் நாடிய போது, அது அந்த மாணவனை “தயவு செய்து செத்து விடு” என்றெல்லாம் மிரட்டி இருக்கிறது.மேலும் இது வருங்காலத்தில் பேர் ஆபத்தை இது உணர்த்தும் விதமாக இருக்கிறது.
மேலும் ஏ. ஐ தொழில்நுட்பம் பின்னாளில் வரப்போகும் பேராபத்து பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார் கவிஞர் வைரமுத்து , அவர் வெளியிட்டு இருக்கிறது பதிவில் ஏ. ஐ வருகையால் உலகில் 15 சதவீத ஊழியர்களுக்கு பணி இழப்பு ஏற்பட நேரிடும் எனக் கூறி இருக்கிறார்.