Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமெரிக்காவில் குளியல் அறையில் இருந்த பெட்டி; பெட்டியை திறந்து பார்த்த மாணவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

அமெரிக்காவில் குளியல் அறையில் இருந்த ஒரு பெட்டியை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவ,மாணவிகள் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.ஒரு நாள் ஆப்ரி என்ற மாணவி வீட்டில் குளியரையில் ஒரு பெட்டியை பார்த்து விட்டு அதை பற்றி தனது தோழி ஒருவரிடம் கேட்டிருக்கிறார்.

அந்த பெட்டியில் ஏதோ இருப்பதை அறிந்த அவர்கள் பெட்டியை திறந்து பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர்.அந்த இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த பெட்டியை குளியல் அறையில் இருந்து எடுத்து வந்து திறந்து பார்த்ததில் அந்த மாணவிகள் இருவரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.அந்த பெட்டிக்குள் ஒரு ஆப்பிள் ஐபோன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.தாங்கள் குளிப்பதை சக மாணவன் தினமும் தெரியாமல் வீடியோ எடுதிருப்பதை உணர்ந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதற்கு முன்பு அந்த மாணவன்
குரூப் சாட்டிங்கில் அந்த மாணவிகளிடம் அந்த பெட்டி எங்கே என்று கேட்டபோது, அதற்கு அதில் என்ன இருக்கிறது என்று மாணவிகள் கேட்க அதற்கு அந்த மாணவன் தனது பேஸ்டும்,பிரஷும் இருப்பதாக கூறியுள்ளார்.

பின்னர் மாணவர்கள் தாங்கள் உண்மையை கண்டுபிடித்து விட்டோம் என்று கூறியுள்ளார்.அதற்கு அந்த மாணவன் பதற்றத்தில் உண்மையை உளரியுள்ளான்.இதனை அடுத்து அவனுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.

Exit mobile version