நீட் தேர்வு எழுத வந்த மாணவி!! உள்ளாடையை அகற்ற சொன்னதால் அதிர்ச்சி!!

0
198
A student who came to write the NEET exam!! Shocked by being asked to remove underwear!!

நீட் தேர்வு எழுத வந்த மாணவி!! உள்ளாடையை அகற்ற சொன்னதால் அதிர்ச்சி!!

2023-24 ஆம் கல்வியாண்டின் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 20,87,445 மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 95,824 மாணவிகளும், 51,757 மாணவர்களும் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான ஹால் டிக்கெட்டுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்காக நாடு முழுவதும் 499 மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று மே 7 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாணவ மாணவிகள் மதியம் 1.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டது.

மாணவ மாணவிகள் தீவிரமாக பரிசோதிக்கப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டனர். மாணவிகள் எந்த ஆபரணமும் அணிந்து வர அனுமதி இல்லை. தோடு, மூக்குத்தி, மோதிரம் கொலுசு போன்ற ஆபரணங்கள் அணியக்கூடாது. தலை முடியை பின்னலிட கூடாது. தலை முடி விரித்த படி மட்டுமே இருக்க வேண்டும்.

மாணவர்கள் ஷு, பெல்ட், சட்டைகளில் பெரிய பட்டன், கை மற்றும் கழுத்தில் கயிறு கட்டி இருத்தல் போன்றவை இருந்தால் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப் படவில்லை. இது போன்று கடும் கட்டுப்பாடு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு தான் நாடு முழுவது நீட் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள தேர்வு மையத்தில், மாணவிகளை பரிசோதித்து கொண்டிருக்கும் போது மாணவி ஒருவரின் உடையில் இருந்து ஒலி எழுந்ததால் மாணவியின் உள்ளாடை மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளாடையை அகற்ற சொல்லியதாக தெரிகிறது.

வேறு வழியின்றி மாணவியும் உள்ளாடையை அகற்றிய பிறகுதான் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப் படவேண்டும் என புகார்கள் வந்துள்ளன.