காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்!
தனது காதலியுடன் மாணவர் ஒருவர் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் காதலன் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா நகரில் மகாத்மா காந்தி பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் நவீன். இதேபோல் பொதுப்பல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஹரஹர கிருஷ்ணா. இவர் ஒரு பொண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கிருஷ்ணாவின் காதலியுடன் நவீன் நெருங்கி பழகி வருவதாக கிருஷ்ணாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால், கிருஷ்ணாவுக்கு மிகுதியான ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் நவீனை ஒழித்து கட்ட முடிவு செய்து உள்ளார்.
திட்டமிட்டபடி, நவீனை அழைத்து வெளிவட்ட சாலையில் உள்ள புதர் பகுதிக்கு தனியாக அழைத்து சென்று மோதலில் ஈடுபட்டு உள்ளார். இந்த சண்டையின் போது நவீன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உள்ளார். அதன்பின் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணா நவீனின் கழுத்தில் கால் வைத்து, மிதித்து கொலை செய்து உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் கத்தி ஒன்றையும் வாங்கி வைத்து உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
ஆனாலும் அவர் அதன்பின்னர் வழக்கம்போல் சாதாரணமாக காணப்பட்டு உள்ளார். இந்நிலையில் நவீனை காணாமல் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதையடுத்து நவீனின் நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்ததில், கடைசியாக அவர் ஹரஹர கிருஷ்ணாவை பார்க்க சென்ற தகவல் தெரிய வந்தது.
அவரிடம் போலீசார் விசாரித்தபோது, சம்பவத்தன்று நவீன் பல்கலை கழகத்திற்கு படிக்க சென்று விட்டதாக கூறியுள்ளார். எனினும் அவர் மேல் சந்தேகமடைந்த போலீசார் கிருஷ்ணாவை பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில் அவர் நவீனை கொலை செய்ததாக ஒப்பு கொண்டு உள்ளார். இதன்படி நவீனின் உடல் மீட்கப்பட்டு உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியுடன் பேசியதற்காக கல்லூரி மாணவர் கொலை செய்த விவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.