Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மீண்டும் எக்ஸாம் இல்லை?

a-sudden-announcement-by-the-minister-of-school-education-no-re-examination-for-students-who-did-not-appear-for-public-examination

a-sudden-announcement-by-the-minister-of-school-education-no-re-examination-for-students-who-did-not-appear-for-public-examination

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மீண்டும் எக்ஸாம் இல்லை?

தமிழகத்தில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக இந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையின் அடிப்படையில் 12 ஆம் வகுப்புகளுக்கு இம்மாத 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 51,33 மாணவ மாணவிகளும் தனித் தேர்வார்களாக 23,747 பேரும் என மொத்தம் 8,75,50 பேர் எழுதி வருகின்றனர். அதனை தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3675 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வில் ஆங்கில மொழி தேர்வை 49 ஆயிரம் மாணவர்களும் தமிழ் மொழி தேர்வை ஐம்பதாயிரம் மாணவர்களும் எழுதவில்லை. அதிகளவு மாணவர்கள் தேர்வு எழுதாததால் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்று கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையில் பேசியவர் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு திட்டம் எதுவும் கிடையாது எனவும் தெரிவித்தார். இந்நிலையில் பள்ளிகளில் குறைந்தபட்ச வருகை இருந்தால் போதும் தேர்வு எழுத முடியும் என்ற நடைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஆண்டுக்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்ற முறை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்த தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கும் மாணவர்களை தேர்வு எழுத வைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version