Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! 

#image_title

நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! 

விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் பிரச்சனை ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியை நோக்கி  ஏர் இந்தியா விமானம் 180 பயணிகளுடன் இன்று மாலை  புறப்பட்டது. அப்போது விமானமானது  நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் இந்த திடீர் கண்ணாடியில் விரிசல் குறித்து டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

இதன் காரணமாக உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர், அந்த விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த திடீர் சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தில் விரிசல் ஏற்பட்ட கண்ணாடி மாற்றப்பட்டு பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா? என்பது குறித்து முறையான ஆய்வு நடத்தப்பட்டது.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென கண்ணாடியில் விரிசல் ஏற்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Exit mobile version