அதிகாலை பயங்கரம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! நூற்றுக்கணக்கான பேர் தூக்கத்திலேயே பலியான பரிதாபம்!
துருக்கி நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் அதிர்ந்து இடிந்து விழுந்தது.
துருக்கி சிரியா எல்லையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் 500 பேருக்கு மேல் பலியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது.
துருக்கி, மற்றும் சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் உறங்கி கொண்டிருந்ததால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இது வரை 200- க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கி, சிரியா ஆகிய இரு நாடுகளில் சேர்த்து மொத்தமாக நிலநடுக்கத்தால் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். துருக்கி நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு உடமைகள் பாதிக்கப்பட்டது கண்டு வேதனை அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.