Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!

A sudden fire accident in a government office!! The bus burnt by the fire causes excitement!!

A sudden fire accident in a government office!! The bus burnt by the fire causes excitement!!

அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!! 

பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்ட பஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள  அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி) பணிமனையானது  செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து  பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள்  நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு தினமும்  இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் குளிர்சாதன வசதிக் கொண்ட பஸ் ஒன்று பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது திடீரென அந்த பஸ்சின் உள்ளே இருந்து கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து ஊழியர்கள் சுதாரித்து என்னவென்று பார்ப்பதற்குள் பஸ் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

அந்த தீயானது பஸ் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீயினால் அந்த பகுதியில் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதிக தீயினால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது.

இதனால் தீ மற்ற பஸ்களில் பரவாமல் இருக்க அவை உடனடியாக அப்புறப்படுத்தப் பட்டன. தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், அண்ணாநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், பஸ்சில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும்  பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த நிலையில் மின் கசிவு காரணமாக பஸ் தீபிடித்து எரிந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா?? என்ற கோணத்தில் அண்ணாநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பணிமனையில் உள்ளபோதே தீப்பிடித்து எரிந்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்தனர்.

பயணிகள் ஏறி பயணம் செய்யும் போது இந்த சம்பவம் நிகழ்ந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இந்த விபத்தால் அங்கு பணிமனையில் பரபரப்பு உண்டானது.

Exit mobile version