Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து! 6 பேர் பலியான சோகம்! 

#image_title

அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து! 6 பேர் பலியான சோகம்! 

அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 6  பேர் உடல் கருகி பலியான சோக சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது,

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. நேற்று இரவு அங்குள்ள குடியிருப்பு வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மள மளவென  பற்றி எரிந்த தீயானது  அடுத்தடுத்த தளங்களில் அதிவேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

ஏழாவது மற்றும் எட்டாவது தளங்கள் வரை பற்றி எரிந்த தீயானது அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைவாகச் சென்று தீயை போராடி அணைக்க முயற்சி செய்தனர். மேலும் குடியிருப்பு வளாகத்தினுள் சிக்கி இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத் துறையினர் சுமார் 12 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தினால் உடல் கருகி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் 4 சிறுமிகளும் அடங்குவர்.  செகந்திராபாத் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 

 

Exit mobile version