கேளிக்கை விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து இருவர் பலி!

0
164
A sudden shooting at a resort! Two people died in succession!

கேளிக்கை விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து இருவர் பலி!

நார்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். ஓஸ்லோ, நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆனால், விடுதி நிர்வாகத்தினர், உள்ளே விட மறுத்ததால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.அப்போது, அந்த கேளிக்கை விடுதிக்குள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் கேளிக்கை விடுதியில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் விடுதியில் இருந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.வேட்டைக்கு வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டனர், தாங்கள் வந்த திருட்டு காரில் ஏறி பறந்து விட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்தனார். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரின் விவரம் குறித்த எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை. நார்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.