Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜப்பான் நாட்டின் பிரதமர்  மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர்  பிழைப்பாரா?

Shot at Prime Minister Shinzo Abe! Will he survive?

Shot at Prime Minister Shinzo Abe! Will he survive?

ஜப்பான் நாட்டின் பிரதமர்  மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர்  பிழைப்பாரா?

டோக்கியாவில் உள்ள ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே.இவர் கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானில் பிரதமராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபி இன்று நடைபெற்ற பொது விழாவில் ஒன்றில் பங்கேற்றார்.

இவ்விழா சாலை பகுதிகளில் நடைபெற்று இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அபே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கிக்கி சூடு நடத்தப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தன் கோட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபேயை நோக்கி சுட்டார்.

அபேவின் முதுகுப்பக்கம் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினார்கள். பின்னர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர்கள் காயமடைந்த அபேவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை முன்னேற்றம் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ஊடகத்தில் பரவி வருகிறது.

Exit mobile version