பேஸ் புக் மூலம் ஏற்பட்ட காதலினால் ஒரு தற்கொலை! கேரளாவில் தொடரும் வரதட்சணை கொடுமைகள்!

0
278
A suicide by love caused by Facebook! Dowry atrocities continue in Kerala!

பேஸ் புக் மூலம் ஏற்பட்ட காதலினால் ஒரு தற்கொலை! கேரளாவில் தொடரும் வரதட்சணை கொடுமைகள்!

எவ்வளவு தான் சட்டங்கள் இயற்றினாலும் கேரளாவில் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதுவும் இதற்கென அங்கு தனி சட்டங்கள் கூட இயற்றப்பட்டது. மணமகன் வரதட்சணை வாங்கும் பட்சத்தில் ஆண்களது பட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று கடுமையான சட்டங்கள் கூட இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு சில மனிதர்கள் திருந்தாமலேயே இருக்கின்றனர்.

கேரள மாநிலத்தில் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் மோபியா பர்வீன். இவர் தொடுபுழாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது முகமது சுஹைல் என்பவர் ஃபேஸ்புக் மூலம் அவருடன் நட்பு ஆனார். அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. எனவே அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

சுஹைல்  துபாயில் பணியாற்றி வருவதாகவும் அந்த பெண்ணிடனும் அவரது குடும்பத்தினரிடமும் கூறி நம்ப வைத்தார். மோபியா பிரீலன்சர் டிசைனராகவும் இருந்து வருகிறார். எனவே அவருக்கான வருமானத்தை அவரே ஈட்டி வருகிறார். இந்நிலையில் ஒருநாள் அவரது காதல் கணவர் திடீரென மனைவியிடம் வந்து தான் ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டி 40 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதை அவரது வீட்டில் வாங்கி தருமாறும் கேட்டுள்ளார்.

வரதட்சனை என்பதை சிறிதும் அந்தப்பெண் விரும்பவில்லை. எனவே அதை மறுத்துவிட்டார். அன்றிலிருந்து அவரது வாழ்க்கையில் ஒரே பூகம்பம் தான். புகுந்த வீட்டில் ஒரே பிரச்சனைதான். அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது தனது கணவருக்கு என்று எந்த வேலையும் இல்லை என்றும், அவருடைய  வருமானத்தை வைத்தே இவர்களது குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் தெரியவந்தது.

எனவே அந்த பெண்ணின் தந்தை, பெண்ணின் கணவர் மற்றும் பெண்ணின் மாமனார், மாமியார் ஆகியோர் பெண்ணை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். அவ்வப்போது இவர்களது கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாத அந்தப் பெண் கடந்த சில நாட்களுக்கு முன் ஆலுவா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சுதீர் அந்தப் பெண் மற்றும் ஆஆணின் குடும்பத்தாரை வரவழைத்து பேசினார். இதனிடையே அந்த பையன் தலாக் முறையை செய்யுமாறு ஒரு நோட்டீசை கொடுக்க மசூதியில் பதிவு செய்திருந்தார். ஆனால் அங்கிருந்தவர்கள் தலாக் என்பது பழங்கால முறை என்றும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கவும் கூறியுள்ளனர்.

சட்டப்படி விவாகரத்து பெறவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக கோபத்தில் இருந்த கணவன் காவல் நிலையத்தில் பெண்ணையும், பெண் வீட்டாரையும் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். எனவே அந்த பெண் தனது கணவரை அறைந்து விட்டார். அதனால் அந்தப் பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதன் காரணமாக அந்த பெண் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்தார்.

அதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக நொந்து போய் உள்ளார். மேலும் அதே நிலையிலேயே வீட்டிற்கு வந்த சில மணி நேரத்தில் அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்கொலை செய்வதற்கு முன் ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார். அதில் தன்னுடைய இறப்பிற்கு கணவர், அவரது பெற்றோர் மற்றும் ஆலுவா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுதீர் ஆகியோர் தான் காரணம் என்றும், அப்பா நீங்கள் சொன்னது சரிதான் அவன் நல்லவன் கிடையாது என்றும், எழுதியுள்ளார்.

எனவே இன்று அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை கொத்தமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்திற்கு வெளியே ஆலுவா எம்எல்ஏ அன்வர் சதாத் போராட்டம் நடத்தி வருகிறார்.